சேலம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சேலம் அரசு மருத்துவமனையில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வாரமாக சேலம் மாவட்டத்தில் உச்சம் பெற்றுள்ளது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (மே.31) சேலம் அரசு மருத்துவமனையில், கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே படுக்கையில் மூன்று நபர்கள் வீதம் அமரவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.