மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிதம்பரத்தை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவரின் ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் கொடியை தொண்டர் ஒருவர் தலைகீழாக பிடித்திருந்தார்.