தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9,10 வகுப்பு ஆங்கில ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் குறித்து இணையவழி பயிற்சி! - சேலம் மாவட்ட செய்திகள்

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, "ஆற்றல்மிக்க பாடத் திட்டங்களுடன் தகவல் தொழில் நுட்ப கருவிகளை ஒருங்கிணைப்பதற்கான பயிற்சி" இணையம் வழியாக வழங்கப்பட்டது.

Online training
Online training

By

Published : Dec 21, 2020, 7:32 PM IST

சேலம்:சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இன்று (டிச., 21) 9, 10ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்களுக்கான, "ஆற்றல்மிக்க பாடம் திட்டங்களுடன் ஐ.சி.டி கருவிகளை ஒருங்கிணைப்பதற்கான பயிற்சி" என்ற இணையவழி பயிற்சி தொடங்கப்பட்டது.

இந்த பயிற்சியில், ஆங்கிலப் பாடத்திலுள்ள அறிமுகம் / ஊக்கம், வளர்ச்சி / சொல்வளம், ஆற்றல் செயல்பாடுகள், மதிப்பீடு, தீர்வு நடவடிக்கைகள் ஆகிய முக்கிய படிநிலைகளில், இணையத்தின் வாயிலாக தகவல் தொழில்நுட்ப கருவியை எவ்வாறு இணைத்து பாடத்தை கற்பிப்பது போன்ற பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த இணையவழிப் பயிற்சியில் 20 தகவல் தொழில் நுட்பகருவிகளை எவ்வாறு ஆங்கிலப் பாடத்திட்டதுடன் இணைத்து கற்பிப்பது என்று எளிமையாக செய்து காண்பிக்கப்பட்டது.

இப்பயிற்சியை சேலம் மாவட்டம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணைமுதல்வர் முனைவர் பி.கோவிந்தபிரகாஷ் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் உள்ள ஆங்கிலம் கற்பிக்கும் 175 ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:முனைவர் ஆய்வு நிதியில் முறைகேடு: மனோன்மணியம் பல்கலை பதிலளிக்க உத்தரவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details