சேலம்:ஓலா கால் டாக்ஸி நிறுவனத்துடன் ஒப்பந்தம் அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு வருடங்களாகவே ஓலா கால் டாக்ஸி நிறுவனம் வாகனங்களுக்கு வாடகை கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளது.
தற்போது டீசல் விலை தற்போது ஒரு லிட்டர் 95 ரூபாயாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், பழைய வாடகை கட்டணத்தை ஓலா நிறுவனம் வழங்கி வருவதாக ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஓலா நிறுவனத்தின் இந்தப் பாரபட்சமான நிலையைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஓலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓலா ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
அதன் ஒரு பகுதியாக சேலம் ஐந்து ரோடு சாலையில் இன்று (செப்.4) ஓலா கார் ஓட்டுநர்கள் 300க்கும் மேற்பட்டோர், தங்களது கார்களை சாலையின் ஒதுக்குபுறம் நிறுத்தி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் மேலும், இன்று முதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு வாகனத்தை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், வாடகை கட்டணத்தை 50 விழுக்காடு உயர்த்தி தர வேண்டும், ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்போராட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலை மறியல்