தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசிய கைத்தறி நாள்: விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் - Salem district news

தேசிய கைத்தறி நாளான இன்று (ஆக. 07) சேலத்தில் மாவட்ட ஆட்சியர் கைத்தறி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

தேசிய கைத்தறி நாள்
தேசிய கைத்தறி நாள்

By

Published : Aug 7, 2021, 7:06 PM IST

சேலம்: தேசிய கைத்தறி நாளான இன்று (ஆக .07) விற்பனை, கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம், 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கப்பட்டது.

கைத்தறி விழா

உள்நாட்டு பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும், 2015ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஏழாவது தேசிய கைத்தறி நாள் விழாவான இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி, விற்பனையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் சேலம் பட்டு, சின்னனூர் பட்டு, சூப்பர் பட்டு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ரகங்களில் கைத்தறிகளால் உருவாக்கப்பட்ட பட்டு புடவைகள், வேஷ்டிகள் இடம்பெற்றிருந்தன.

மாவட்ட ஆட்சியர் கைத்தறி விற்பனையைத் தொடங்கி வைத்தார்

கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, தங்களுக்குப் பிடித்த ஆடைகளை வாங்கிச்சென்றனர். நிகழ்ச்சியில் 25 கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்திற்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

இதையும் படிங்க: 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வரவேற்கத்தக்கது - எம்.பி சுப்பராயன்'

ABOUT THE AUTHOR

...view details