சேலம்: நாம் தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 'தமிழ்நாடு தினம்' வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமிழர்கள் நாங்கள், தமிழ்நாடு நாளாக தொடர்ச்சியாக நவம்பர் 1 ஆம் தேதியைக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு சேலத்தில் கொண்டாடுகிறோம்.
நவம்பர் 1, 1967இல் தமிழ்நாடு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு என்று பெயர் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது, அவசியமற்ற குழப்பம்.
குழந்தை பிறந்த நாளை கொண்டாடுவீர்களா, இல்லை அக்குழந்தைக்கு பெயர் வைத்த நாளை கொண்டாடுவீர்களா என அரசுக்கு கேள்வியை முன்வைக்கிறேன். தமிழ்நாடு அரசின் முடிவு என்பது, குழந்தைக்கு பெயர் வைத்த நாளை பிறந்த நாளாக கொண்டாடுவது போல் உள்ளது.