அரசின் தடையையும் மீறி தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னையில் கடந்த 6ஆம் தேதி வேல் யாத்திரையை அக்கட்சியின் தலைவர் எல். முருகன் தொடங்கினார். பின்னர் கைதுசெய்யப்பட்டு வெளியே வந்த அவர், திட்டமிட்டப்படி வேல் யாத்திரை நடைபெறும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் வேல் யாத்திரை பொதுக்கூட்டங்களை பாஜகவினர் நடத்திவருகின்றனர்.
இளைஞர்களின் கட்சி பாஜக - எல்.முருகன் - பாஜக
சேலம்: இளைஞர்கள் அதிகம் விரும்பும் கட்சியாக பாஜக விளங்குவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.
meeting
அதன்படி, இன்று சேலம் குரங்குச்சாவடியில் நடைபெற்ற வேல் யாத்திரை கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், இளைஞர்கள் அதிகம் விரும்பும் கட்சியாக பாஜக விளங்குவதாகக் கூறினார். மேலும், வேல் யாத்திரைக்கு என்ன அவசியம் என்று கேட்கும் எதிர்க்கட்சிகளுக்கு, வேல் யாத்திரை அவசியமல்ல அத்தியாவசியம் என்று கூறினார். இதில் சேலம் மாவட்ட பாஜகவினர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு இந்தியில் பதிலளிப்பது சட்டவிதி மீறலாகும்!
Last Updated : Nov 19, 2020, 5:56 PM IST