சேலம் வடக்குச் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சியின் அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் கடந்த சில நாள்களாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டுவந்தார்.
இந்த நிலையில் மாதேஸ்வரன் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்துவருவதாகக் கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில் பறக்கும் படை அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர் மாதேஸ்வரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாதேஸ்வரன் வீட்டில் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய் பணம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பறக்கும் படை அலுவலர் புவனேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், கன்னங்குறிச்சி காவல் துறையினர் மாதேஸ்வரனை கைதுசெய்தனர்.
சேலத்தில் பணப்பட்டுவாடா: அதிமுக பிரமுகர் கைது! - Voters
சேலம்: வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்த கன்னங்குறிச்சி அதிமுக அவைத்தலைவர் கைதுசெய்யப்பட்டார்.
admk
மேலும் அவரது வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100 மதுபாட்டில்களும் பறிமுதல்செய்யப்பட்டன.