தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாகன சோதனையில் 1.80 கோடி ரூபாய் பறிமுதல்! - Money captured in vehicle checkup at salem

சேலம்: சேலத்தில் வாகன சோதனையில் 1.80 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகன சோதனை
வாகன சோதனை

By

Published : Mar 29, 2021, 8:36 PM IST

சேலம் அடுத்துள்ள ஜாரி கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் தலைமையில் பறக்கும் படை அலுவலர்கள் இன்று (மார்ச் 29) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கோவையிலிருந்து சேலம் நோக்கிவந்த வேனை நிறுத்திச் சோதனையிட்டதில், தனியார் வங்கிக் கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 1.80 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது.

மேலும் அப்பணம், உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தைத் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல்செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல சேலம் நகர காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் வெல்லம் வியாபாரி உரிய ஆவணம் இல்லாமல் வைத்திருந்த மூன்று லட்சம் ரூபாயும், தனியார் பைனான்சியர் ஒருவர் கொண்டுவந்த 60 ஆயிரத்து 750 ரூபாய் ரொக்கமும் பறிமுதல்செய்யப்பட்டது.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி; முடியாத வழக்கு - மீண்டும் ராதாபுரம் தொகுதியில் அதே வேட்பாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details