சேலம்: மேட்டூர் அருகேயுள்ள கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மகன் தனுஷ்(19). நீட் தேர்வு பயம் காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் மாநிலம் முழுவதிலும் பெரும் சோகத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இறந்த மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் நிதியுதவியாக இறந்த மாணவரின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கினார். இவருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திப் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், "நீட் தேர்வு நிரந்தரமாக வேண்டாம், நீட் தேர்வால் ஒட்டுமொத்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான் திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும், இதற்கு முயற்சி எடுப்போம் என்றும் தெரிவித்து இருந்தோம்.