தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெய்பீம் சர்ச்சை; முதலமைச்சர் பதில் கூறுவார் - மடைமாற்றிவிட்ட கே.என். நேரு - சேலத்தில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்

'ஜெய்பீம்' படம் குறித்த கேள்விகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் சொல்வார் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

c
c

By

Published : Nov 19, 2021, 2:15 PM IST

சேலம்:சேலத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினர்.

அமைச்சர் கே.என். நேரு பத்திரிக்கையாளர் சந்திப்பு

தொடர்ந்து அமைச்சர்கள் செய்தியாளரைச் சந்தித்தனர். அப்போது நேரு கூறுகையில், "ஜெய் பீம் திரைப்படம் படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கூறுவார். மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது" என்றார்.

அவரைத் தொடர்ந்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறுகையில், "மழை வெள்ளத்தால் டெல்டா மாவட்டங்களில் கடுமையாக வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் ஹெக்டர் பாதிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஆலோசிக்கப்பட்டு ஒரு ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாயும், சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ள விளை நிலங்கள் பகுதிக்கு ஒரு ஹெக்டருக்கு ஆறாயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

பாஜக தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் சித்து வேலைகள் எடுபடாது. ஒன்றிய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது உழவர் தொடர்ச்சியாக நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பத்திரிகையாளர் சந்திப்பு

இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட உழவர் உயிரிழந்த நிலையில் காவல் துறை சார்பில் அவர்களுக்குப் பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்ட போதிலும் தொடர்ந்து போராடிவந்தார்கள்.

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்துள்ளது இந்தியாவில் உள்ள அனைத்து உழவருக்கும் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. இந்த அறிவிப்பை அன்றே செய்திருக்கலாம். இந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக செயல்பட்டிருந்தால் அப்போதே சட்டம் நிறைவேறி இருக்காது" என்று கூறினார்.

இதையும் படிங்க: Jai Bhim Controversy: ஜெய் பீம் பட விவகாரம் - சூர்யா மீது வன்னியர் சங்கத்தினர் புகார்

ABOUT THE AUTHOR

...view details