சேலம்:ஏற்காடு அண்ணா பூங்கா, படகு இல்லம், ரோஸ் கார்டன் சென்ற அமைச்சர் கே.என்.நேரு கோடை விழாவிற்கு நடவு செய்யப்பட்டுள்ள பூஞ்செடிகளை பார்வையிட்டு, விழாவுக்கான ஏற்பாடுகளை விரைவுப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, ஏற்காட்டைச் சேர்ந்த சாலையோர வியாபாரிகள் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, மீண்டும் சாலையோரம் கடை அமைக்க அனுமதி கேட்டனர் .
அதனைத் தொடர்ந்து, சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதைக்கருத்தில் கொண்டு அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் ஏலம் எடுத்துக்கொள்ளலாம், மீதம் உள்ள நபர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கடை அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதி வழங்கினார்.
இதையும் படிங்க: கோடை விழா மலர்க் கண்காட்சிக்குத் தயாராகும் ஏற்காடு பூங்கா!