தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொங்கல் பரிசுத் தொகுப்புப் பணிகள் - அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு

பொங்கல் பரிசுத் தொகுப்புப் பணிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் பொன்னி கூட்டுறவு பண்டகசாலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜன.2) நேரில் ஆய்வு செய்தார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

By

Published : Jan 2, 2022, 10:48 PM IST

சேலம்: தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 4ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 10,57,998 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் 886 இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 10,58,884 குடும்பங்களுக்கு ரூ.56.97 கோடி மதிப்புள்ள சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வருகின்ற 4ஆம் தேதி முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கீழ்க்காணும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 பொருட்கள்

குடும்ப அட்டை ஒன்றுக்கு, பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், ரவா ஒரு கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு 500 கிராம், கரும்பு, துணிப்பை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

சேலம் மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கென நடைபெற்று வரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொன்னி கூட்டுறவு பண்டகசாலையில் இன்று (ஜன.2) நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா.இராஜேந்திரன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பி.ரவிக்குமார், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மஞ்சள் விளைச்சல் அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details