சேலம் மாவட்டம் வெள்ளக்கல்பட்டியில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் இன்று (ஆக. 20) தொடங்கிவைக்கப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என். நேரு, சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நேரு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவின்போது தூய்மை தொழிலாளர்களுக்கு சீருடை, உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை அமைச்சர் நேரு வழங்கினார். அதன் பின் சிறப்புரையாற்றிய நேரு, "சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க 'நம்ம ஊரு சூப்பரு' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கழிவு பொருள்கள் கொட்டும்போது மக்கும் குப்பையை தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் கொட்ட வேண்டும். அதுபோல சாக்கடை கழிவுநீர், நீர் நிலைகளில் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பப்பாளி மற்றும் முருங்கை போன்ற மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.