மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம், நான்கு அலகில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு நிரந்தர தொழிலாளராக சுமார் 700க்கும் மேற்பட்டோரும், ஒப்பந்த தொழிலாளர்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஊதியம் வழங்கவில்லை
இந்நிலையில் நிலக்கரி கையாளும் பிரிவில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஊழியர்கள் போராட்டம் இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், 50க்கும் மேற்பட்ட ஒப்பந்தப்பணியாளர்கள் உடனடியாக ஊதியம் வழங்க கோரி அனல்மின் நிலைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஊழியர்கள் போராட்டம் இந்த போராட்டம் காரணமாக நிலக்கரி தரம் பிரிக்கும் பணி பாதிப்படைந்து, மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.