கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக அதிகரிப்பு!
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 8 மணி நிலவரப்படி 92 அடியை எட்டி உள்ளதாக பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
mettur dam water level is at 91 mcft
இதனையடுத்து அணைகளில் இருந்து மூன்று லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்துவருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து நொடிக்கு நொடி அதிகரித்துள்ளது.
இன்று காலை 82 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மாலை 8 மணிக்குள் 92 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் நீர்வரத்து இருந்தால் நாளை காலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நூறு அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated : Aug 12, 2019, 9:42 PM IST