சேலம்: கர்நாடக மாநிலத்தில் பருவமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளிலிருந்து கடந்த 8-ந் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் தற்போது, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்குக் காவிரியில் வினாடிக்கு 1.20 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது, மேட்டூர் அணை தனது முழுக்கொள்ளவை 120 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம் 120 அடியை எட்டிய நிலையில், 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், படிப்படியாக ஒரு லட்சம் கன அடி வரை நீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
42-ஆவது முறையாக முழுக்கொள்ளவை எட்டியது மேட்டூர் அணை முன்னதாக, காவிரி கரையோர பகுதிகளான செக்கானூர், பூலாம்பட்டி ,தங்கமாபுரிபட்டினம், சேலம் கேம்ப் பகுதிகளில், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் அணை தனது முழுக்கொள்ளவை எட்டுவது இது 42-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கி வைக்கப்படுமா? அதில் உள்ள சிக்கல்கள் என்ன?