சேலம்: துரைமுருகன் தலைமையிலான பொதுக் கணக்குக் குழு ஈரடுக்கு பேருந்து நிலையத்தை இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அமைக்கப்பட்ட பொதுக்கணக்குக் குழுவினர் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நிழலுலக தாதா சோட்டா ராஜன் மீதான வழக்குகள்: சிபிஐ விசாரணை தொடக்கம்
இவ்வேளையில், சேலம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும், பல்வேறு திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், நிதி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பது குறித்தான, ஆய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
சமையல் எண்ணெய் தன்னிறைவுக்கான தேவை: சிறப்புக் கட்டுரை
இக்கூட்டத்தில் அலுவலர்களிடம் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடபட்டது மற்றும் பணிகள் குறித்தும் பொதுக்கணக்குக் குழுவினர் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். இதில் பொது நிறுவனங்கள் குழு தலைவர் செம்மலையும், பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள் பாஸ்கர், கீதா, மருதமுத்து மாவட்ட ஆட்சியர் ராமன், சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் ஆகியோருடன் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பொதுக்கணக்குக் குழு தலைவர் துரைமுருகன் தலைமையிலான குழு ஆய்வு இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், ஈரடுக்கு பேருந்து நிலையத்தின் பணிகள் குறித்து துரைமுருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநகராட்சி ஆணையர் சதீஷ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய துரைமுருகன், ’சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கணக்குக் குழு ஆய்வில் அலுவலர்களிடம் பணிகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பணிகளில் தாமதமும், குறைபாடுகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுக் கணக்குக் குழுத் தலைவர் துரைமுருகன் பேட்டி