சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 146 அடி கொண்ட இந்த முருகன் சிலைக்கு இன்று (ஏப்.6) குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த முத்துமலை முருகன் சிலை 3 ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்தது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலேசிய பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரமாக, 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டு அருள் பெற்று சென்றனர்.
புத்திர கவுண்டம்பாளையத்தில் முத்துமலை முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா முழக்கம் எழுப்பி கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் விண்ணதிர முழக்கமிட்டு வழிபாடு செய்தனர். மலேசிய நாட்டின் பத்துமலையில் 140 அடி உயரத்தில் முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் புதிய மைல்கல்லாக 146 அடி உயர முருகன் சிலையை தற்போது அமைத்து உள்ளனர்.
இதையும் படிங்க: கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி முருகன் பங்குனி உத்திரத் திருவிழா