தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் திமுக வசமாக வேண்டும் - அமைச்சர் கே.என். நேரு - Minister KN Nehru in salem

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சேலத்தில் பேசினார்.

kn Nehru
kn Nehru

By

Published : Jan 31, 2022, 12:10 AM IST

சேலத்தில் சேலம் மாநகராட்சி 21 ஆவது வார்டு அதிமுக செயலாளர் கிருஷ்ணன் தலைமையில், தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் அண்ணாதுரை, 1 வது வார்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 50 பேர் என 300 க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கட்சியினர் மத்தியில் பேசுகையில், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் நல்லாட்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் வரும் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி அதிகளவில் வெற்றி பெற பாடுபட வேண்டும். தமிழ்நாடு அரசின் மீது பாஜக தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. குறிப்பாக அரியலூர் மாணவி இறப்பில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதன் உண்மை நிலை தற்போது தெரியவந்துள்ளது. மாநில கூட்டுறவு சங்கங்களின் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைத்து நிறைவேற்றிய சட்ட முன்வடிவில் ஆளுநர் கையொப்பமில்லாமல் இருப்பது, ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய சட்டப்பேரவை தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது போன்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் அமைச்சர் கே.என். நேரு

மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு சங்கடங்களை கொடுத்தாலும் அதை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி புரிந்து வருகிறார். உள்ளாட்சியிலும் தொடர அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்"என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்- அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details