கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம் திமுகவைச் சேர்ந்த காக்காவாடி ஊராட்சி மன்ற தலைவர் பிரதீபா பூபதி, கரூர் ஊராட்சி ஒன்றிய குழு 2-ஆவது வார்டு உறுப்பினர் பாமகவை சேர்ந்த சத்யா அசோக்குமார் மற்றும் கரூர் 3-ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவருமான சிவானந்தம் ஆகியோர் அக்கட்சிகளிலிருந்து விலகி, எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்த திமுக,பாமக பிரமுகர்கள் - இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மூன்று பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பாமக பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்தனர்
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், மாவட்ட கழக பொருளாளருமான கண்ணதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஆழியாறு பாசனத் திட்ட தின விழா; காமராஜர் புகைப்படம் இல்லை என கோஷமிட்ட தமாகா தொண்டர்கள்