சேலம்: மாவட்ட ஆட்சியராக எஸ். கார்மேகம் இன்று பதவியேற்றார்.
மாவட்டத்தில் பதவியேற்கும் 173ஆவது ஆட்சியர் இவர் ஆவார். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சி.அ. ராமன் நேற்று முன்தினம் (மே 17) இரவு மாற்றப்பட்டார்.

இன்று பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், "கடினமான காலகட்டத்தில் தற்போது பயணித்து வருகிறோம். பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும். மக்களைப் பாதுகாக்கவே ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது.
இன்னும் ஒரு சில வாரங்கள் வீடுகளில் பொதுமக்கள் பத்திரமாக இருக்க வேண்டும். விரைவில் பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு வருவோம். இதனால் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.
களப்பணியில் போர்வீரர்களாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள் என அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள். எனவே, நோய்த்தொற்று குறையும் வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் துணை நின்று ஆதரவு தர கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.