சேலம் மாவட்டம் கருப்பூரில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் ஒரே நாளில் மூன்றாயிரம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு மரம்நடும் பணிகளைத் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து கருப்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர். மேலும், அங்குள்ள குன்று பகுதியிலும் பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதையடுத்து பேரூராட்சி பகுதிகளில் உள்ள பூங்கா, மருத்துவமனை, பள்ளி, கல்லூரி என காலியாக உள்ள அனைத்து இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று பேரூராட்சி இயக்குநர் உத்தரவிட்டார்.
3000 மரக்கன்றுகள் நடும் விழா இதைத் தொடர்ந்து கருப்பூரில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் நடப்பட்ட மரக்கன்றுகள் பட்டுப்போகாமல் பாதுகாக்கவும் பட்டுப்போகும் மரக்கன்றுகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் புதிய மரக்கன்றுகள் நடப்படும் என்றும் பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Iraq Protests: சீர்திருத்தங்களை அறிவித்தார் பிரதமர் அப்துல் மஹ்தி!