சேலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் பணியாற்றும் திமுக வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாத முதலமைச்சர் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளையே இதுவரை அவர் நிறைவேற்றவில்லை.
ஆளுங்கட்சி செய்யும் சட்ட விரோத, அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க சட்ட ரீதியாக திமுக வழக்கறிஞர்கள் போராடுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் எட்டுவழிச் சாலை திட்டம் கைவிடப்படும். மக்கள் நினைக்கும் அனைத்தும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.