சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர் நேற்றிரவு (ஆகஸ்ட் 31) இரவு பணியில் இருந்தார். அப்போது ஏற்காடு, முருகன் நகரை சேர்ந்த செல்லையா (77) என்பவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில் செந்தில்குமார் மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது.
அப்போது அவர் செல்லையாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதுகுறித்து கேட்ட உறவினர்களிடமும் தகறாறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவலையறிந்த உள்ளூர் செய்தியாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்து, செந்தில்குமாரின் செயல்களை வீடியோ பதிவு செய்தனர். அப்போது செந்தில்குமார் செய்தியாளர்களையும் ஆபாசமாக திட்டி தாக்க முற்பட்டுள்ளார்.