தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி - விசாரணைக்கு உத்தரவு!

சேலம்: சேர்வராயன் மலையடிவாரத்தில் அரசு அனுமதியின்றி இயங்கி வரும் கல்குவாரி குறித்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வட்டாட்சியருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரி!

By

Published : Jun 27, 2019, 9:37 AM IST

சேலம் மாவட்டத்தில் கனிம வளங்கள் நிறைந்த சேர்வராயன் மலையடிவாரப் பகுதிகளில் உள்ளன குப்பனூர், கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்கள். இக்கிராமங்களின் எல்லைப் பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கல்குவாரி ஒன்று அனுமதியின்றி இயங்கி வருகிறது. இதனால் இயற்கை வளங்கள் கொள்ளைபோவதுடன் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில், கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி கணவன் மனைவி உள்பட 3 உயிரிழந்தனர்.

குப்பனூர், கத்திரிப்பட்டி கிராமங்களில் இயங்கிவரும் கல்குவாரிகள் குறித்து 'அரசு அலுவலர்களின் உதவியோடு இயங்கும் கல் குவாரி' என கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியிட்டோம்.

இதனையடுத்து அப்பகுதியில் கல்குவாரி இயங்குகிறதா என்பதை நேரில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டுமென அப்பகுதி வட்டாட்சியருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரி!

இந்த நடவடிக்கை தொடர்பாக சேலம் மாவட்ட கனிமவளத்துறை அலுவலர்கள் கூறுகையில், "கத்திரிப்பட்டி, குப்பனூர் பகுதியில் தனியார் நிலத்தில் பத்து அடிக்கு மேல் குவாரி வெட்டி கனிம வளத்தை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது, வெட்டப்பட்ட குழியின் ஆழத்தை அளக்க இயலாத வகையில் மண் கொட்டி மூடியுள்ளனர். எனவே இது தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details