தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்! - 3 lakhs liquior bottles seized

சேலம்: கர்நாடகாவில் இருந்து கடத்திவந்த 3 லட்சம் மதிப்பிலான 2,100 மதுபாட்டில்களை பறிமுதல்செய்த காவல் துறையினர் 4 பேரை கைதுசெய்துள்ளனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்!
மதுபாட்டில்கள் பறிமுதல்!

By

Published : Jun 9, 2021, 3:17 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சேலம் வழியாக மதுபானங்கள் கடத்திச்செல்வது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் சேலம் அருகே உள்ள கருப்பூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக மாநிலத்திலிருந்து, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மதுபானங்கள் கடத்திவந்த இரண்டு வாகனங்கள் பிடிபட்டது.
வாகனத்தை சோதனை செய்தபோது, பெட்டி பெட்டியாக 2,100 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுபானங்களை கடத்திவந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஸ்வரன், சுப்பிரதீபன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ், முத்துவேல் ஆகிய நால்வரையும் காவல் துறையினர் அதிரடியாகக் கைதுசெய்தனர்.
மேலும் மதுபாட்டில்களை கடத்திவந்த கார், மினி ஆட்டோ என இரண்டு வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கருப்பூர் காவல்நிலைய எல்லை பகுதியில் மட்டும் 15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details