தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த மாவட்ட ஆட்சியர்! - சேலம் அரசு மருத்துவமனை

சேலத்தில், மாவட்ட ஆட்சியர் ஒருவர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர்
சேலம் மாவட்ட ஆட்சியர்

By

Published : Aug 19, 2021, 11:08 PM IST

சேலம்: வாழப்பாடி அருகே உள்ள பேளூர் அடுத்த கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ. இவர், 2018ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஓராண்டுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், தர்மலாஸ்ரீ மகப்பேறு சிகிச்சைக்காக சேலம் வந்திருந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் ஆக. 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

நேற்று (ஆக. 18) நள்ளிரவு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாவட்ட ஆட்சியர் தர்மலாஸ்ரீ ஈடிவி பாரத்திடம் பேசுகையில், “சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர், சாமானியரும் சிகிச்சைபெறும் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்றது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:'வளர்ச்சிக்கு சாதி தடையாக இருக்க கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்'

ABOUT THE AUTHOR

...view details