சேலம்:நாமக்கல் மாவட்டம் வையப்பமலையைச் சேர்ந்தவர் ஆராயி (65). இவர், தனது மகள் ரேவதி (47) உடன் சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தார். தங்களது ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறி இருவரும் அமர்ந்தபோது, அங்கு வந்த ரேவதியின் கணவர் இயேசுதாஸ், ரேவதி மீது ஆசிட் ஊற்றி விட்டு தப்பிச்சென்றார்.
இதில், ரேவதி படுகாயமடைந்தார். இதனைக் கண்ட ரேவதியின் தாயார் ஆராயி, அலறியடித்தபடி கதறி அழுதார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் டவுன் காவல் துறையினர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேவதி, ஆராயி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
பிரிந்து வாழ முடிவு
அப்போது ஆராயி கூறுகையில், "சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் இயேசுதாஸ். இவருக்கும் எனது மகளுக்கும், இயேசுதாஸுக்கும் திருமணமாகி 22 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.