சேலம்:29ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமினை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்காட்டில் இன்று (மே8) தொடங்கி வைப்பதற்காக சேலம் வந்தார்.
இன்று காலை ஏற்காடு மலைப்பாதையில் அமைச்சர் சுப்ரமணியன் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது ஏற்காடு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வருகின்றனரா? என்பது குறித்து நேரடி ஆய்வு நடத்தினார்.