தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜிஎஸ்டி வரி உயர்வு - கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் நேற்று(டிச.20) சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 21, 2021, 12:58 PM IST

சேலம்:உள்நாட்டில் தயாரிக்கப்படும் கைத்தறி ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுவதும் ரத்து செய்யக்கோரி சேலத்தில் கைத்தறி உற்பத்தியாளர்கள் நேற்று(டிச.20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் ஜவுளி ரகங்கள் மீதான 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை வரும் ஜனவரி முதல் 12 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சேலம் மற்றும் திருச்செங்கோடு வட்டார கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் கைத்தறி ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சேலம் கைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், ' ஒன்றிய அரசு உடனடியாக ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய வேண்டும்.

உள் நாட்டு பொருட்களை வரவேற்கும் ஒன்றிய அரசு, கைத்தறி ஆடைகளுக்கு ஜி எஸ் டி வரி விதித்துள்ளது. இதனால் நெசவாளர்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கார் ஓட்டும்போது மாரடைப்பு - உயிரிழந்த ஓட்டுநர்

ABOUT THE AUTHOR

...view details