சேலம்:கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், நீலகிரி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை ஐந்து நாட்களுக்கு மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஏற்காடு மலைப்பிரதேசத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது.
அப்போது, நேற்று மதியம் 3 மணி அளவில் ஏற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார மலை கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த கனமழை பெய்தது. குறிப்பாக, ஏற்காடு சேர்வராயன் கோவில் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக ஏற்காடு ஏரி பூங்கா மற்றும் படகு இல்லம் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.