தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘பாட்டிகள் பேத்திகள் தினம்’  - சேலத்தில் உறவை மேம்படுத்தும் திருவிழா! - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: பாட்டிகள், பேத்திகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், பாட்டிகள் பேத்திகள் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பாட்டிகள் பேத்திகள் தினம்

By

Published : Oct 14, 2019, 9:52 AM IST

கூட்டுக் குடும்ப வாழ்வு, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்ட சூழலில், தனிக் குடும்பங்கள் பெருகி வருகின்றன. இதனால் மூத்தவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், இளைய தலைமுறையினர் வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாட்டிகள், பேத்திகளுக்கு இடையில் இருக்கும் உறவை வளர்த்தெடுக்கும் வகையில் சேலத்தில் 'பாட்டிகள் பேத்திகள்' தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகள், தங்களின் பாட்டிகளுடன் கலந்துகொண்டனர். இந்திய அளவில் முதன்முறையாகப் பாட்டிகள், பேத்திகளுக்குத் தனி தினம் கொண்டாடப்படுகிறது என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் உள்ள தமிழ்நாட்டு ஆயர்கள் பெண்கள் ஆணையம் சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘பாட்டி பேத்தி தினம்’ சேலத்தில் உறவை மேம்படுத்தும் ருசீகரத் திருவிழா!

விழாவில் பங்கேற்ற பாட்டிகள், பேத்திகளின் தலையில் மலர் கிரீடம் சூட்டி கௌரவிக்கப்பட்டனர். மேலும், பாட்டிகள் பேத்திகளின் பாச உணர்வை வெளிப்படுத்தும் வகையிலான, கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து லோட்டஸ் ஒருங்கிணைந்த சமூக செயல்பாடு அமைப்பின் தலைவர் செலின் அகஸ்டின் மேரி கூறுகையில், "இன்றைய இளைய தலைமுறையினருக்கு மூத்தவர்களின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகிறது. மாறிவிட்ட நவீனக் காலச் சூழலில், குடும்ப உறவுகளை வளர்த்தெடுப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. எனவே இதுபோன்ற நிகழ்வுகளை, நாங்கள் சிரத்தையோடு நடத்தி வருகிறோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details