சேலம்:மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிக்கில் பட்டேல். இவர் சேலம் டவுனில் கடந்த 18 ஆண்டுகளாக தங்கத்தின் தரத்தை மதிப்பீடு செய்யும் பரிசோதனை பட்டறை நடத்திவருகிறார். நேற்று நள்ளிரவில் பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த முகமுடி கொள்ளையர்கள் லாக்கரில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணம், இரண்டு சவரன் தங்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சேலம் டவுன் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று தடயவியல் வல்லுநர்கள் மூலம் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.