சேலம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆடு வளர்ப்பு குறைந்துள்ளதாலும், வெளி மாநிலத்திலிருந்து ஆடுகளின் வரத்துக் குறைவினாலும் சேலத்தில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 640 லிருந்து 700 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ஆட்டு இறைச்சி விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கடைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
ஒரு நாளைக்கு 50 கிலோ அளவிற்கு விற்பனையான ஆட்டு இறைச்சி 15 கிலோ அளவிற்குத்தான் விற்பனையாவதாக இறைச்சிக் கடை வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வெறிச்சோடி காணப்படும் ஆட்டு இறைச்சி கடை மேலும் ஆட்டு இறைச்சியின் விலையேற்றத்தினால் நாட்டுக்கோழி இறைச்சி கிலோ 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஆட்டு இறைச்சி வாங்கியவர்கள் அனைவரும் மீன் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாகவும் வியாபாரிகள் கலக்கத்துடன் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:'அய்யோ... அங்கிட்டுப் போகாதீங்கப்பா' - பவானிசாகர் அணையை பதறவிட்ட மலைப்பாம்பு