தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலம் கோட்ட ரயில் நிலையங்களில் வைஃபை வசதி: ரயில்வே மேலாளர்! - சேலம் கோட்ட ரயில் நிலையங்களில்

சேலம்: சேலம் கோட்டத்தில் 80 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

wifi facility in salem railway stations

By

Published : Oct 1, 2019, 11:45 PM IST

மகாத்மாகாந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு ரயில்வே பணிமனையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி பூங்கா, 5 ஆயிரம் மரக்கன்றுகள் கொண்ட அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

இதனை தொடக்கி வைத்து ரயில்வே பணிமனையினை பார்வையிட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சேலம் கோட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஈரோடு ரயில் நிலையத்தில் 86 கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ரயில்வே மேலாளர் சுப்பாராவ் செய்தியாளர் சந்திப்பு

மேலும் சேலம் கோட்டத்தில் 80 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, மகாத்மாகாந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தன்னார்வ அமைப்பின் உதவியோடு ஈரோடு, சேலம், போத்தனூர் ரயில் நிலையத்தில் நர்சரி பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ரயில் நிலைய பயணசீட்டு வழங்கும் மையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க மொபைல் செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: ரயில் படிக்கட்டில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

ABOUT THE AUTHOR

...view details