சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள மாத நாயக்கன்பட்டி ஊரைச் சேர்ந்தவர் குட்டப்பட்டி நாராயணன்(97). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான இவர், 1977ஆம் ஆண்டு தாரமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர். இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் மாத நாயக்கன்பட்டியில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.
காங்., முன்னாள் எம்.எல்.ஏ குட்டப்பட்டி நாராயணன் மரணம்! முதலமைச்சர் இரங்கல் - Former Congressman ExMLA Kuttapatti Narayanan dies
சேலம்: காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் குட்டப்பட்டி நாராயணன் மறைவைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதனை அறிந்த திரளான காங்கிரஸ் கட்சியினரும், பிற கட்சியினரும் மாத நாயக்கன்பட்டிக்கு வந்து குட்டப்பட்டி நாராயணன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குட்டப்பட்டி நாராயணன் மரணம் அடைந்ததை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாத நாயக்கன்பட்டிக்கு நேரில் வந்து அவரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குட்டப்பட்டி நாராயணனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதேபோன்று மேச்சேரி அமர் அத்தனூர் பகுதியைச் சேர்ந்த சதாசிவம். இவர் அதிமுக மேச்சேரி ஒன்றியச் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது வீட்டிற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
TAGGED:
முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்