சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்துக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.வி. தங்கபாலு கூறுகையில், "தற்போது மத்தியில் ஆட்சி நடத்திவரும் பாஜக தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுக்க மக்கள் கடுமையான பாதிப்படைந்துள்ளனர். நேற்று கூட இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு தவறான திட்டத்தினை செயல்படுத்தி இருக்கிறார்.