தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரண்டாவது நாளாக தீப்பிடித்து எரியும் குப்பைக் கிடங்கு!

சேலம் : செட்டிச்சாவடி குப்பைக்கிடங்கில் இரண்டாவது நாளாக தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

garbage godown
garbage godown

By

Published : Nov 23, 2020, 2:33 PM IST

சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள செட்டிச்சாவடியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. சேலம் மாநகராட்சிப் பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் இங்குதான் கொட்டப்பட்டு வருகின்றன. இங்குள்ள குப்பைக் கிடங்கில் நேற்றிரவு (நவ.22) திடீரென்று தீப்பற்றியது. இதன் காரணமாக அருகிலுள்ள விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்நிலையில், தற்போதுவரை தீ அணைக்கப்படாமலும், தொடர்ந்து குப்பை லாரிகள் அப்பகுதிக்கு வந்து வண்ணமும் இருந்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்டுவதற்காக வந்த 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி குப்பை வண்டிகளை தடுத்து நிறுத்தி மேலும் குப்பைக் கொட்ட விடாமல் இன்று (நவ. 23) சிறைபிடித்தனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

தொடர்ந்து, இந்த குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைத்துவிட்டு குப்பையை கொட்டிக் கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்போது செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடலூர் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

ABOUT THE AUTHOR

...view details