தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பசை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் - Fire break out at gum production plant: Rs. 15 lakhs of goods destroyed

சேலம்: செவ்வாய்பேட்டை அருகே பசை தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் தீயில் கருகின.

Fire break out
Fire break out

By

Published : Feb 22, 2020, 10:25 AM IST

சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை அருகே ராஜகணபதி என்பவருக்குச் சொந்தமான பசை தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் எதிர்பாராதவிதமாக இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஆலையிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பசை ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில், பசை தயாரிப்பு மூலப்பொருட்களான ஸ்டார்ச் மூட்டைகள், விறகுகள், இயந்திரங்கள் என, சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதனிடையே, தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இஸ்லாமியர்களை பாகிஸ்தான் அனுப்ப வேண்டும்: கிரிராஜ் சிங்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details