தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அட்டை மறுசுழற்சி ஆலையில் பயங்கர தீ விபத்து - தீ விபத்து

சேலத்தில் பழைய அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சி செய்யும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Aug 27, 2021, 9:40 PM IST

சேலம்: எருமாபாளையம் அடுத்த சன்னியாசிகுண்டு பகுதியில் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சி செய்யும் ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பழைய அட்டைப் பெட்டிகள் மொத்தமாக லாரி மூலம் கொண்டு வரப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஆக.26) நள்ளிரவு, ஆலையில் அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சி செய்யும் பணிகள் வழக்கம்போல் நடைபெற்று வந்த நிலையில் ஆலைக்கு வெளியே மொத்தமாக வைக்கப்பட்டிருந்த அட்டைகள் திடீரென தீப்பற்றி எரிந்தன.

பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்

தீ மளமளவென பரவி ஆலையின் உள் பகுதியிலும் பற்றி எரிய தொடங்கியது. உடனே செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகங்களின் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து

இந்த தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய அட்டைகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கிச்சிப்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பல்லாவரம் தோல் தொழிற்சாலையில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details