சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த தாதாபுரம் அருகேயுள்ள ஆதிகாட்டூரைச் சேர்ந்தவர் கோபால்(54), காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மணி(50) என்ற மனைவியும், ரமேஷ் கண்ணன்(21) என்ற மகனும், பிரியா(15) என்கிற மகளும் உள்ளனர். பிரியா தாதாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
மனைவி மணி ஈரோட்டில் கூலித் தொழில் செய்து வரும் நிலையில் கோபால் தனது மகன் மகளோடு சேலத்தில் வீட்டில் வசித்து வந்தார். நேற்று (பிப்.18) இரவு மகன் ரமேஷ் கண்ணன் பாட்டி வீட்டிற்குச் சென்று விட்டதால், வீட்டில் கோபாலும் பிரியாவும் மட்டுமே இருந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (பிப்.19) அதிகாலை 4 மணி அளவில் தனது தம்பி சுகந்திரன் வீட்டிற்குச் சென்ற கோபால், 'நான் பிரியாவை சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டேன்' என்று கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுகந்திரன் அண்ணன் வீட்டிற்து சென்று பார்த்த போது, அங்கு ரத்த வெள்ளத்தில் பிரியா இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுது உள்ளார்.