தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம்! - salem news

சேலம்: மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது.

தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம்
தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம்

By

Published : Mar 21, 2021, 2:41 PM IST

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான ஆய்வு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள எட்டு தேர்தல் பொது பார்வையாளர்கள், ஒரு தேர்தல் காவல் பார்வையாளர், ஆறு தேர்தல் செலவின பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா கணிகர், மேட்டூர் சார் ஆட்சியர் வி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. திவாகர், சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், உள்பட 11 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், செலவின கணக்குக் குழு, கண்காணிப்புக் குழு பொறுப்பு அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...'நாங்க ஜெயிக்க நாடார் ஓட்டே போதும்' - ஹரி நாடாருடன் சிறப்பு நேர்காணல்

ABOUT THE AUTHOR

...view details