தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனை - சேலம் வேட்பு மனு பரிசீலனை

சேலம்: ஊராட்சி ஒன்றியங்களில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதை சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநருமான சி.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

salem local body election, election observer inspection meeting held in salem, சேலம் வேட்பு மனு பரிசீலனை, சி காமராஜ் ஆய்வு
election observer inspection meeting held in salem

By

Published : Dec 19, 2019, 9:57 AM IST

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 169 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 194 கிராம ஊராட்சி மன்ற பதவிகளுக்கும், 1,914 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 2,294 பதவிகளுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப் பதிவு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டினம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 119 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 191 கிராம ஊராட்சி மன்ற பதவிகளுக்கும், 1,683 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 2,005 பதவிகளுக்கான சாதாரண தோ்தலுக்கான வாக்குப் பதிவு டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பெரம்பலூரில் கோலமாவு தயாரிப்பு, விற்பனை அமோகம்!

உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறுதல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான ஆய்வு மேற்கொள்ளுதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நேற்று நடைபெற்றது. இப்பணிகளை சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சி.காமராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்பம்!

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம், வாழப்பாடி, தலைவாசல், ஆத்தூா் மற்றும் கெங்கவல்லி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேட்பு மனுக்களின் பரிசீலனைப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள், அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தார்.

ABOUT THE AUTHOR

...view details