சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று (அக்.8) நடந்த அதிமுகவின் 51ஆவது ஆண்டு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ், 'கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ததும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததும் அதிமுகவினர். கைதானவர்களை ஜாமீனில் எடுத்தது திமுகவினர். ஆனால், வேண்டுமென்றெ திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பப்பட்டுவருகிறது. அதிமுக மீது களங்கம் கற்பிக்கும் வகையில் ஊடகங்கள் செயல்படுவது வருத்தமளிக்கிறது.
இந்த வழக்கில் ஏதும் துப்பு கிடைக்காத நிலையில், கொடநாடு வழக்கை காலம் தாழ்த்த வேண்டும் என்ற வகையில் சிபிசிஐடிக்கு மாற்றியிருக்கின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் 38 திமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள்? இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஏன் குரல் எழுப்பவில்லை? காவிரி நதிநீர் பிரச்னை வந்த போது, அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினார்கள். ஆனால், தற்போது திமுக எம்பிகள் வாய் மூடி மௌனம் சாதிப்பதற்கு என்ன காரணம்..?