தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி - salem district news

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

edapadi-palanisamy-says-govt-should-clear-whether-neet-exam-happen-or-not
'நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி

By

Published : Jun 30, 2021, 5:41 PM IST

சேலம்:ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் 405 மாற்றுத் திறனாளிகளுக்கு 4.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கரோனா நிவாரணப் பொருட்களை முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கிராமப்புற மக்களுக்கு அதிமுகவினர் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திமுக அறிவிப்பும், வாக்குறுதியும்

தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பதாகவும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாகவும் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இதுவரை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.

அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள ஏழை நடுத்தர மக்கள் ஏராளமானோர் வீடுகளை கட்டி வருகின்றனர். ஆனால், கட்டுமானப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையை குறைப்பதாக திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

தடுப்பூசி தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி முறையாக போடப்படுவதில்லை. பல இடங்களில் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசியை வைத்துக் கொண்டு, அதிக அளவிலான மக்கள் கூட்டம் கூடும் வகையில் நிலைமை உள்ளது. எனவே, டோக்கன் வழங்கி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அப்போது, கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும்.

திமுக பொய் வாக்குறுதி

திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியில் முக்கியமானது ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்பது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இது அனைத்தும் தெரிந்த திமுக, தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் உள்ளனர்.

நான் அரசுப்பள்ளியில் படித்தவன்- எடப்பாடி பழனிசாமி

எனவே, நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட்டு குழப்பத்தை போக்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் பயில அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. ஆனால், அது ஸ்டாலின் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பொய் கூறி வருகிறார். யாரும் அப்போது கோரிக்கை விடுக்கவில்லை.

நான் அரசுப்பள்ளி மாணவன்

நான் அரசு பள்ளியில் படித்ததால் , மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். அமைச்சர் மா. சுப்பிரமணியம் 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று ஒரு பேட்டியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் மின்கம்பிகளில் அணில் ஏறியதால் மின்வெட்டு ஏற்பட்டது என்று அமைச்சர் கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. மின்வெட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிஏஜி அறிக்கையில் கூறியது போல முறைகேடுகள் நடைபெறவில்லை. மின்வாரியத்தில் அனைத்தும் சொத்துக்களாக இருக்கின்றன.

'நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி

முறைகேடு இல்லை

மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதால் திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்சாரம் விலைக்கு வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது. இதில் முறைகேடு என்பதற்கு இடமில்லை.

சசிகலா ஒரு சிலரிடம் மட்டும் அல்ல, ஆயிரம் பேரிடம் பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை, அவர் அதிமுகவில் உறுப்பினராகக்கூட இல்லை என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டோம் . முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு வந்த கொலை மிரட்டல் குறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்வு: இரட்டை வேடம் போடும் பாஜக- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details