தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு பழனிசாமி நிவாரணம் - நாடக கலைஞர்களுக்கு நிவாரண உதவி

சேலம் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜுன் 29) வழங்கினார்.

நாடக கலைஞர்களுக்கு நிவாரண உதவி, எடப்பாடி பழனிசாமி
நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி

By

Published : Jun 29, 2021, 5:51 PM IST

சேலம்: கரோனா பாதிப்பு காரணமாக தொழிலின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாடக கலைஞர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக உதவிகள் வழங்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நலிவடைந்த நாடக நடிகர்கள் உள்ளனர். கரோனா காரணமாக திருவிழாக்கள், மேடை நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் உள்ளதால் வருமானமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, பொது ஊரடங்கு காரணமாக, பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு நிவாரணப் பொருள்களை இன்று வழங்கினார்.

ஒருவருக்கு ரூ.1000 மதிப்பில் நிவாரணம்

பாதிக்ப்பட்டுள்ள நாடகக் கலைஞர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடகக் கலைஞர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று நிவாரணத்தை பெற்றுக்கொண்டனர். இதில், சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: viral video: 'ஸ்டாலினின் ஃபிட்னஸ் சீக்ரெட்'

ABOUT THE AUTHOR

...view details