தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக எம்.பி. சேலம் மாவட்ட ஆட்சியருக்கு மனு - DMK MP SR Parthiban BYTE

சேலம்: தேர்தலில் மாவட்ட ஆட்சியர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் மனு அளித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் பேட்டி
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் பேட்டி

By

Published : Dec 31, 2019, 5:35 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் திமுக மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், சேலம் முதலமைச்சருக்கு சொந்த மாவட்டம் என்பதால் வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறாமல் இருக்க கூடுதலாக காவலர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் பேட்டி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பார்த்திபன், " சேலம் முதலமைச்சருக்கு சொந்த மாவட்டம் என்பதால் ஆளுங்ட்சி வெற்றி பெற அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் கட்டாயப்படுத்துவர். இதனால் அலுவலர்கள் அச்சப்பட வேண்டிய சூழல் ஏற்படும்." என்றார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் மகுடஞ்சாவடி தேர்தல் உதவி அலுவலர் செல்வராஜ் ஆளுங்ட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாக திமுகவினர் குற்றம்சாட்டினோம். ஆனால் அவரை மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தேர்தலில் மாவட்ட ஆட்சியர் நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:

வேண்டாம் என்ஆர்சி! வேண்டாம் சிஏஏ! - எதிர்க்கும் கோலங்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details