மத்தியில் ஆளும் பாஜக அரசு மருத்துவ மாணவர்களின் படிப்பை பாதிக்கும் வகையில் நீட் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்நிலையில், மருத்துவ படிப்பில் சேர விரும்பும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான, ஓபிசி இட ஒதுக்கீட்டை வழங்க, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையிலும், அதை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்! - சேலத்தில் இந்திய வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலம்: மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
DYFI Protest In Salem
அதன் ஒரு பகுதியாக, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.