தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலத்தில் தலித் திருச்சபை கலந்தாய்வு கூட்டம்

கத்தோலிக்க திருச்சபை ஆயர் நியமனத்தில் தலித் கிறிஸ்துவர்களுக்கு இடம் வேண்டும் என தலித் திருச்சபை கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Dalit Church Conference in Salem
Dalit Church Conference in Salem

By

Published : Aug 4, 2021, 10:45 PM IST

சேலம் : சேலத்தில், இந்திய தலித் திருச்சபை கலந்தாய்வு கூட்டம் ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக தலித் கிறித்தவர் இயக்கங்களின் கூட்டமைப்பு- ஒருங்கிணைப்பாளர் ஞா.மேத்யு தலைமை வகித்தார்.
கிறித்தவ மக்கள் களம் ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ், தலித் கிறித்தவர் விடுதலை இயக்கம் செயலாளர் லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, தலித் சமுதாயத்தில் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பேசினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் மேத்யூ கூறுகையில், "இந்தியாவில் 174 மறை மாவட்டங்களும், தமிழகத்தில் 18 மறை மாவட்டங்களும உள்ளன. ஒவ்வொரு மறை மாவட்டத்திற்கும் ஒரு ஆயர் என கத்தோலிக்க திருச்சபை நிர்வாகம் நியமித்துள்ளது. இந்தியாவில் 180 ஆயர்கள் உள்ளனர்.
இவர்களில் 10 பேரும் தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயர்களில் ஒருவர் மட்டுமே தலித் சமூகத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் 3 பேராயர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. இந்திய அளவில் 31 பேராயர்கள் உள்ளனர்.

இவர்களில் 2 பேர் மட்டுமே தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 12 ஆயர்கள் நியமனம் நடந்துள்ளது. இவர்களில் ஒருவர் கூட தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிராங்ளின் பேச்சு
எனவே தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர் நியனங்களில் சாதி தீண்டாமையை கடைபிடிக்காமல் சீர்திருத்தம் செய்ய வேண்டும். தலித் கிறிஸ்தவர்கள், சாதி இந்துக்களால் மட்டுமல்லாமல், சாதி கிறிஸ்தவர்களாலும் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.
தலித் கிறிஸ்தவர்கள் அதிகார மையத்திற்கு வர வேண்டும் என்று கடந்த 2008ஆம் ஆண்டு போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி நுன்சியோ அறிவித்துள்ளார். தலித் ஆயர்கள் மற்றும் பேராயர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

இனி வரும் அனைத்து ஆயர் பணியிடங்களில் மட்டும் அல்லாமல் தற்போது காலியா உள்ள ஆயர் பணியிடங்களிலும் தலித் ஆயர்கள் மற்றும் பேராயர்களை பணியமர்த்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : அரசு மரியாதையடன் அடக்கம் செய்யப்பட்ட தலித் எழுத்தாளரின் உடல்

ABOUT THE AUTHOR

...view details